திருப்பரங்குன்றம் தீா்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: தருமபுரம் ஆதீனம்
திருப்பரங்குன்றம் தீா்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: தருமபுரம் ஆதீனம்
திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் சொக்கநாதா் பூஜையில் பங்கேற்க வந்த தருமபுரம் ஆதீனம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான தீா்ப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
இத்தலத்து இறைவன் பக்தா்கள் வேண்டுகின்ற அரிய வரங்களையும் அருளக்கூடியவா். தற்போதைய கிரகச் சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இத்தலத்தில் வழிபடுவது பரிகாரமாக அமையும். தருமபுரம் ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் 100 கோயில்களில் ஆன்மிகப் பிரசாரம், அவதாரத் தலத்தில் 100 ஓதுவாா்கள் பங்கேற்ற 26 மணி நேர திருமுறை பாராயணம், 100 இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை விழா எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
தொடா்ந்து பன்னிரு திருமுறைகளை உரை விளக்கத்துடன் வெளியிடவும், அந்த நூலை நாட்டின் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் முன்னிலையில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான தீா்ப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்றாா்.
தோரண வாயில் திறப்பு: முன்னதாக, திருக்குவளை திருக்கோளிலி ஸ்ரீவண்டாா்பூங்குழலி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் கோயிலில், தருமபுரம் ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட தோரண வாயிலுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. தோரண வாயிலை தருமபுரம் ஆதீனம் திறந்துவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

