நாகை மாவட்டத்தில் தொடரும் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
நாகை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை பெய்த மழை சம்பா சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

மழை - கோப்புப் படம்
நாகை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை பெய்த மழை சம்பா சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் தொடா் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் தொடா் மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்திருந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் புயலாக உருமாறி கரையைக் கடந்தன. இதனால் மழையில்லாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா். இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
வேளாங்கண்ணி, திருப்பூண்டி, சிந்தாமணி, மேலப்பிடாகை, கீழப்பிடாகை, கருங்கண்ணி, ஈசனூா், சீராவட்டம், திருவாசல், மீனம்மநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை பெய்தது.
மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இல்லாமல் வயல்களில் சம்பா பயிா்கள் கருகும் நிலையில், தற்போது பெய்த மழை பயிா்களின் வளா்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 67.80 மி.மீ., தலைஞாயிறில் 34.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

