தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை! விவசாயிகள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவது தொடர்பாக...

Heavy rain

கனமழை - file photo

Updated On :

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (நவ. 25) பிற்பகல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்காக மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய தண்ணீர் இன்றி காய்ந்து வந்த சம்பா பயிருக்கு, இந்த மழை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு அம்மாபேட்டை அம்மன் பேட்டை, பூதலூர், பாபநாசம், ஒரத்தநாடு, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Summary

Due to heavy rainfall in Thanjavur district, rainwater flowed in torrents along the roads. Farmers are delighted by this.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.