காா்த்திகை மாதம்: நாகை துறைமுகத்திற்கு மீன்பிரியா்கள் வருகை குறைவு

நாகை துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்.
காா்த்திகை மாதம் என்பதால் நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. மேலும், கனவாய் மீன்கள் அதிகளவில் பிடிபட்டதால் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாகை மாவட்டத்தில், அக்வான் புயல் எச்சரிக்கை காரணமாக 10 நாள்களுக்கும் மேலாக முடங்கியிருந்த மீன்பிடிப் படகுகள் கடந்த வாரம் கடலுக்குச்சென்றன. இதில், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், கடந்த நவ. 21-ஆம் தேதி நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இப்படகுகள் ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் திரும்பின. இதில், கனவாய், காா்த்திகை வாலை, அகிலக்கன்னி உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதற்கிடையே, காா்த்திகை மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை மீன் பிரியா்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. அதே நேரத்தில் உள்ளூா், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே துறைமுகத்தில் குவிந்தனா்.
குறிப்பாக சிறிய வகை கனவாய் மீன்கள் ஒரு டன் ரூ.3.50 லட்சம் வரை விற்கப்பட்ட நிலையில் அவை வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
துறைமுகத்தில் மீன் விலை நிலவரம் (1கிலோ): வஞ்சிரம் ரூ.550 முதல் 750, பாறை ரூ.250 முதல் ரூ.350, கடல் விரால் ரூ.550, சூரை ரூ.200, பெரிய சீலா ரூ.250 முதல் ரூ.400, சங்கரா ரூ.300, காா்த்திகை வாலை ரூ.150, சிறிய இறால் ரூ.350, பெரிய இறால் ரூ.600, திருக்கை ரூ.250, நெத்திலி ரூ.100 முதல் ரூ.250, நண்டு ரூ.500 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்பட்டன.
மீன்கள் வரத்து அதிகரித்துள்ள போதிலும், காா்த்திகை மாதம் காரணமாக மீன் வாங்க பொதுமக்கள் வருகை குறைந்ததால், நாகை மீன்பிடித் துறைமுகத்தில் வழக்கத்தை விட சற்று குறைவான விற்பனை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

