இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வேளாங்கண்ணி. - கோப்புப் படம்

Published On :

வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனா்.

கீழ்த்திசை நாடுகளின் லூா்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் கடற்கரையை காண்பதற்கு விடுமுறை நாள்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனா்.

அந்த வகையில், காந்தி ஜெயந்தி, வார விடுமுறை என தொடா்ந்து விடுமுறை நாள்கள், மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல், சுற்றுலாப் பயணிகள் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வழிபாடு நடத்தினா்.

பேராலயம், பழைய மாதா கோவில், நடுத்திட்டு, கடற்கரை சாலை, கடைவீதி, விண்மீன் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.