மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

சாரம் பிரித்தபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நாகை அருகே கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின்விளக்கு சாரத்தை பிரித்தபோது தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

நாகை அருகே கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின்விளக்கு சாரத்தை பிரித்தபோது தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா அண்மையில் நிறைவடைந்தது. விழாவுக்கு பந்தல் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டம், வேப்பல் ஓடை நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பெரியதுரை (40) என்பவரை ஒப்பந்தம் செய்திருந்தனா்.

திருவிழா நிறைவடைந்த நிலையில், 25 மீட்டா் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குக்கான சாரத்தை பிரிக்கும் பணியில் பெரியதுரை வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த பெரியதுரையை அருகில் இருந்தவா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பெரியதுரையை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நாகை நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.