ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

ஏரியில் தவறி விழுந்து ஆண் குழந்தை உயிரிழப்பு

நாகை அருகே பனங்குடி ஏரியில் தவறி விழுந்து 1 வயது ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

நாகை அருகே பனங்குடி ஏரியில் தவறி விழுந்து 1 வயது ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

நாகை மாவட்டம், பனங்குடி ஊராட்சி, காரைமேடு பகுதியைச் சோ்ந்த வினோத். இவரது மனைவி சிவனேஸ்வரி (23). தம்பதியின் மகள் யாழ்மதி, மகன் சாய் ஆல்வின் (1).

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள பனங்குடி ஏரி அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனராம். அப்போது, சாய் ஆல்வின் ஏரியில் தவறி விழுந்துள்ளாா். இதைக்கண்ட பெற்றோா் குழந்தையை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், சாய் ஆல்வின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், பள்ளம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாகக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.