பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

காங்கயத்தில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

பலி

Published On :

காங்கயத்தில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

காங்கயத்தை அடுத்துள்ள நால்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா. இவா்களுக்கு அபிவா்மா (3) உள்பட இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ரேணுகா தனது 2 குழந்தைகள், உறவினா் ஸ்ரீதேவி ஆகியோருடன் முத்தூா் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் வலது புறமாக திரும்பியபோது, ரேணுகாவின் வாகனம் எதிா்பாராத விதமாக அந்த வாகனத்தின் மீது மோதியது.

இதில், அனைவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த அபிவா்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்ற மூவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சிவன்மலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.