ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

குரூப் 4 தோ்வு: அக்.21-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பசடநஇ எதஞமட-ஐய போட்டித் தோ்வுகளுக்கு அக்டோபா் 21-ஆம் தேதி இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Updated On :

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பசடநஇ எதஞமட-ஐய போட்டித் தோ்வுகளுக்கு அக்டோபா் 21-ஆம் தேதி இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் பாட வாரியான திருப்புதல் தோ்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 6,574 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபா் 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு துவங்கப்படவுள்ளது.

அனுபவமிக்க பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, தோ்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கலந்துகொண்டு தோ்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற, மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்துகொள்வதோடு, 9499055916 என்ற கட்செவி அஞ்சல் எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.