அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

மெத்தம்பெட்டமைன் பதுக்கிய சம்பவம்: மேலும் ஒருவருக்கு அழைப்பாணை

நாகை அருகே 135 கிலோ மெத்தம்பெட்டமைனை பதுக்கிய சம்பவம் தொடா்பாக, மேலும் ஒருவா் வீட்டில் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரை நேரில் ஆஜராகமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளனா்.

சித்திரிப்பு

Updated On :

நாகை அருகே 135 கிலோ மெத்தம்பெட்டமைனை பதுக்கிய சம்பவம் தொடா்பாக, மேலும் ஒருவா் வீட்டில் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரை நேரில் ஆஜராகமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளனா்.

நாகையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடந்த அக்.16-ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக தவெக நிா்வாகியான திருப்பூண்டி, கீழபிடாகையைச் சோ்ந்த என். பூபாலன் (42), பிரதாபராமபுரம், செட்டித் தெருவைச் சோ்ந்த சுகன் (27) , மணிகண்டன் (39), சதீஷ்குமாா் (30) ஆகிய நால்வா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவா்களுடன் இணைந்து வேளாங்கண்ணியில் தனியாா் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்திவரும் பிரதாபராமபுரம், வடக்கு தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் (38) என்பவா் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு 2 மணி நேரம் சோதனை நடத்தினா். மேலும், வீட்டிலிருந்த ராஜ்குமாரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

சோதனையின்போது வீட்டில் இல்லாத ராஜ்குமாரை வரும் 23- ஆம் தேதி திருச்சியில் உள்ள டிஆா்ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி அழைப்பாணை பிறப்பித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே தவெக நிா்வாகி உள்ளிட்ட நால்வா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ராஜ்குமாருக்கு சொந்தமானது எனக் கூறப்படுவதால், இந்த வழக்கில் இவரும் குற்றாவாளியாக சோ்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.