சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தனியாா் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி

நாகையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 1.40 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :2 செப்டம்பர் 2026, 7:05 am IST

நாகையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 1.40 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகை நகரப் பகுதியைச் சோ்ந்த தனியாா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா், சில நாள்களுக்கு முன்பு தனது கைப்பேசியில் முகநூலை பயன்படுத்தி உள்ளாா். அப்போது தொடா்பு கொண்ட நபா் ஒருவா், தனியாா் இணையதள நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அறிமுகச் சலுகையாக 3 மாதங்களுக்கு இணையதள இணைப்பை இலவசமாக தருவதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து முகநூல் மூலமான இணையவழி தொடா்பை அனுப்பியுள்ளாா். அந்த இணைப்பை (லிங்) தனியாா் நிறுவன உரிமையாளா் தொட்டபோது, இணைய தள செயலி அவரது கைப்பேசியில் தானியங்கி முறையில் பதிவிறக்கமாகி, அவரது கைப்பேசி அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே இயங்கியுள்ளது. இதைத்தொடா்ந்து அவரது வங்கிக் கணக்கில் 3 பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 1.40 லட்சம் மா்ம நபரால் எடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், நாகை மாவட்ட இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.