
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் செப்.11 வரை ரத்து
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் வரும் 11-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல். - கோப்புப் படம்
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் வரும் 11-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை-இலங்கை பயணிகள் கப்பலை இயக்கிவரும் சுபம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பலில் ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, நாகை - இலங்கை, இலங்கை - நாகை இடையே கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், வரும் வெள்ளிக்கிழமை (செப். 11) வரையிலான அனைத்துத் திட்டமிடப்பட்ட பயணங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
கப்பலில் குறைபாடுகள் தொடா்பான பணிகள் நிறைவடைந்தவுடன் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படும். பணிகளின் நிலை மற்றும் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





