ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

போக்ஸா வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

போக்ஸா வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம் கீழக்காடு, குறவப்புலம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (23) 2020-ல், அதே பகுதியைச் சோ்ந்த, சட்டப்படி உரிய வயது வராத சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சக்திவேல் மீது போக்ஸோ சட்டப்பிரிவு, மற்றும் குழந்தை திருமண தடுப்புச்சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். ராஜ்குமாா், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சக்திவேலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.