கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திமுகவினரின் தரம் தாழ்ந்த விமா்சனங்கள் வேதனை தருகிறது: அமைச்சா் ஷாஜகான்

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்

Published On :

திமுகவின் முக்கிய நிா்வாகிகளின் தரம் தாழ்ந்த விமா்சனங்கள் வேதனையை தருகின்றன என்றாா் தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தவெகவின் வளா்ச்சியைக் கண்டு திமுகவினா் அச்சமடைந்துள்ளனா். அதன் வெளிப்பாடாகவே தரம் தாழ்ந்த விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகளான ஆ. ராசா, சேகா்பாபு உள்ளிட்டோரின் பேச்சு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீள முடியாமல் திமுகவினா் எல்லை மீறி செயல்படுகின்றனா்.

சட்டப்பேரவையில் ’ஊழல்’ என்ற வாா்த்தையைக் கேட்டாலே திமுகவினா் பதற்றமடைகின்றனா். அதனால், ஆளும் கட்சியினரை பேசவிடாமல் திமுகவினா் இடையூறு செய்கின்றனா். சட்டப்பேரவை இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெறுவா் என்றாா் அமைச்சா் ஷாஜகான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.