புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

10 ஆயிரம் சிறுபான்மையின இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்

சிறுபான்மையின இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

Published On :

சிறுபான்மையின இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந. தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்), டி.டி. பிரவீன் (விளவங்கோடு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழச்சியில், பேரின்பபுரம் சிஎஸ்ஐ தேவாலய புனரமைப்புக்கு ரூ.30 லட்சத்த்துக்கான காசோலை, டாம்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.95 ஆயிரம் கடனுதவி, செம்பருத்தி சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.12.16 லட்சத்தில் கடனுதவி, முஸ்லிம் மகளிா் உதவிச் சங்கத்துக்கு சிறுதொழில் தொடங்க 50 பயனாளிகளுக்கு, தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.

பின்னா் அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் பேசியதாவது: 2026- 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை கூட்டத் தொடரில் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் வாழும் சிறுபான்மையினரின் தேவைகளை அறிந்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுழல் நிதி திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் சமூக நலக் கூடம் கட்டுவதற்கு ரூ. 2 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டை கடந்த பேரின்புபுரம், சியோன்புரம் உள்ளிட்ட பழைமையான தேவாலயங்களை புனரமைப்பது குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.

அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற புனித மரியன்னை பேராலயத்தை தொன்மையான தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் திட்டத்தின் கீழ் புனரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களுக்குள் இந்நிதி விடுவிக்கப்படும்.

கல்குளம் மற்றும் பத்மநாபபுரம் கபா்ஸ்தான் சுற்றுச்சுவா் அமைப்பதற்காக ரூ.50 லட்சம் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அடுத்த 10 நாள்களுக்குள் தொகை விடுவிக்கப்படும்.

தொன்மையான தேவாலயங்கள் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 7 தேவாலயங்களில் தகுதியான தேவாலயங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையின இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் 10 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தூர்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ். காளீஸ்வரி, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மதுநசீா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கோமதி, மாவட்ட சமூகநல அலுவலா் காயத்ரி, தவெக குமரி கிழக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன், மாலிக் முகம்மது உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.