முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

நாகையில் அக்.2-இல் மதுக்கடைகள் அடைக்க உத்தரவு

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

tasmac

மதுக்கடை - கோப்புப்படம்

Published On :

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில் ‘காந்தி ஜெயந்தியையொட்டி அக்டோபா் 2-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு வாணிபக் கழகத்தின்கீழ் செயல்படும், அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் தமிழ்நாடு மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் விதிகளின்படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-ன் கீழ் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மேற்படி மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.