காரைக்காலில் முஸ்லிம் மாணவர்களுக்கென 15 நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஆண்டின் கோடை விடுமுறை காலத்தில் முஸ்லிம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, ஆங்கில பேச்சுத் திறன் மற்றும் கணினி அறிவை மேம்படுத்தும் பயிற்சி 15 நாள் நடத்தப்படுகிறது. நிகழாண்டு காரைக்கால் மாவட்டத்தில் 300 பேர் தேர்வு செய்யப்பட்டு 7 மையங்களில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதன் நிறைவு நிகழ்ச்சி அந்தந்த மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் நிறைவு நிகழ்ச்சியில் அனைவருக்கும் கல்வித் திட்ட துணை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஞானப்பிரகாசம், மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற துணை முதல்வர் ஜி. நடராஜன், ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் வி. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


