நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

திருவாரூரில் போலீஸாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் காவல் துறையினரின் பாரபட்ச நடவடிக்கைகளை கண்டித்து, திமுகவின் ஆதிதிராவிடர் நலக் குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :

திருவாரூரில் காவல் துறையினரின் பாரபட்ச நடவடிக்கைகளை கண்டித்து, திமுகவின் ஆதிதிராவிடர் நலக் குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் அருகே திருராமேஸ்வரத்தில் அண்மையில் இருதரப்பினரிடையே நிகழ்ந்த தகராறு தொடர்பாக இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சாதி வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், காவல்துறையினரின் பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றக் கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலர் கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாவட்டச் செயலர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, அமைப்பாளர் இளையராஜா, பகுத்தறிவு கலை இலக்கியக்கழக மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, திருவாரூர் நகரச் செயலர் எஸ். பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் தாஜூதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.