மகளிர் சுயஉதவிக் குழுவில் கடனாகப் பெற்ற பணத்தை கணவர் எடுத்துச் சென்றதால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் அருகேயுள்ள ராதாநல்லூரைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி சிவசங்கரி (30). இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனாக வாங்கிய பணத்தை வீட்டில் வைத்திருந்தாராம். அந்தப் பணத்தை கண்ணதாசன் எடுத்துச் சென்று செலவு செய்ததால், மனமுடைந்த சிவசங்கரி கடந்த மார்ச் 1 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.
இதையறிந்த குடும்பத்தினர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு அவர் புதன்கிழமை (மார்ச் 2) உயிரிழந்தார்.
இதுகுறித்த சிவசங்கரியின் சகோதரர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்க்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால்... அதிமுக குறித்து அமைச்சர் ஆனந்த்!

வினா - விடை வங்கி... சிந்து சமவெளி நாகரிகம்!
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்

ஹாக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..! அரையிறுதிக்கான வாய்ப்பு தக்கவைப்பு!
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


