பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

நகைக் கடை உரிமையாளர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

மத்திய அரசின் கலால் வரிவிதிப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மத்திய அரசின் கலால் வரிவிதிப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் வெள்ளி நீங்கலாக தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்களுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தங்க நகை விற்பனையாளர்கள் மார்ச் 2 ஆம் தேதி முதல் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 2 ஆவது நாளான வியாழக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு நடைபெற்றது.

திருவாரூர் காசுகடைத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளை அடைத்து நகைக் கடைக்காரர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் வரி விதிப்பால் நகை வாங்குவோர் சவரனுக்கு கூடுதலாக ரூ. 250 வரை செலவிட நேரிடும். மேலும், நகை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.