மழை: நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் வியாழக்கிழமை தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் வியாழக்கிழமை தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் வியாழக்கிழை காலை 6 மணி நிலவரப்படி மழை அளவு எதுவும் பதிவாகவில்லை. பின்னர், வானம் இருண்டு,  குளிர்ந்த நிலையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக, நீடாமங்கலம் பகுதியில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, நீடாமங்கலம் நகரில் அக்ரஹாரம், கீழராஜவீதி, வடக்குவீதி உள்ளிட்ட பகுதிகளிலும், விரிவாக்க குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. குண்டும், குழியுமான இந்த சாலையில் பாதசாரிகளும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதே நிலைதான் வலங்கைமான் பகுதியிலும் நிலவியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com