குடவாசல் அருகே புத்தாற்றின் குறுக்கே மரப்பாலம் அமைக்கும் கிராம மக்கள்
குடவாசல் அருகே கோயில்பத்து கிராமத்தில் இடுகாட்டுக்குச் செல்வதற்கு பாலம் இல்லாததால் ஆற்றின் குறுக்கே கிராம மக்களே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.


குடவாசல் அருகே கோயில்பத்து கிராமத்தில் இடுகாட்டுக்குச் செல்வதற்கு பாலம் இல்லாததால் ஆற்றின் குறுக்கே கிராம மக்களே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
குடவாசல் - நன்னிலம் சாலையில் குடவாசல் அருகே கோயில்பத்து, திருவிடைச்சேரி மாதா கோயில்தெரு, அருவிழிமங்கலம் ஆகிய கிராமங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் எவரேனும் இறந்துபோனால் அவரை அடக்கம் செய்வதற்கு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்றுதான் இடுகாட்டுக்குச் செல்ல வேண்டும். கோயில்பத்திலிருந்து புத்தாற்றின் குறுக்கே மரப்பாலம் அமைத்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.
இந்நிலையில், மரப்பாலம் சேதமடைந்த நிலையில், மீன்டும் புதிய மரப்பாலம் அமைக்கும் பணியில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோயில்பத்து கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கூறியது: எங்கள் ஊரில் கடந்த 30 ஆண்டுகளாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு புத்தாற்றில் குறுக்கே இறங்கிதான் செல்லும் நிலை இருந்தது. இல்லையெனில் சுமார் 2 கி.மீ. தொலைவு சுற்றிதான் எதிர்கரைக்குச் செல்ல முடியும். மழைக்காலங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இதுநாள் வரை இல்லை.
இந்நிலையில், மரப்பாலத்தை அமைத்து பயன்படுத்தி வந்தோம். அதுவும் சேதமடைந்துவிட்டது. இப்போது, எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மூங்கில் மரங்களைக்கொண்டு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்பகுதி மட்டுமல்லாது, வடவேர், நாரணமங்கலம் உள்ளிட்ட எதிர்கரையில் உள்ள கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள், மாணவர்கள் கும்பகோணம் அல்லது நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ. சென்று பேருந்தில் செல்ல வேண்டும். எனவே, கோயில்பத்து கிராமத்தில் உள்ள புத்தாற்றில் புதிய தரைப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...