மன்னார்குடியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை (அக். 13) தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை (அக். 13) தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்டத்தில் படித்த ஆண், பெண் இருவருக்கும் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. மன்னார்குடி பூமாலை வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை  காலை 9.30 முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ள இந்தத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 18 முதல் 40 வயதுக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறது. விரும்புவோர் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, சுய விவரக் குறிப்பு அசல் மற்றும் சான்றிதழ்களுடன் இரு மார்பளவு புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com