நீடாமங்கலத்தில், ஆந்திரத்தைச் சேர்ந்த கொத்தடிமை சிறுவர்கள் இருவரை சைல்டு லைன் அமைப்பினர் வெள்ளிக்கிழமை மீட்டு, மன்னார்குடி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஏலூரைச் சேர்ந்த அஞ்சலி (8), அவரது அண்ணன் பத்ரிநாத் (12) ஆகியோரை ரூ .10 ஆயிரத்துக்கு அவர்களின் பெற்றோரிடம் கொடுத்து மூன்று மாதங்களாக ஆந்திரத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி அவரது மனைவி தரணி ஆகிய இருவரும் இரண்டு சிறுவர்களையும் கொத்தடிமைகளாக நீடாமங்கலம் ஒன்றியம் வடகாரவயல் ஊராட்சி குளத்துமேடு அருகில் அழைத்து வந்துள்ளனர்.
சிறுவர்கள் இருவரையும் வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தி வந்தனர். சிறுவர்கள் இருவரும் தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக காட்டுப் பகுதியில் விட்டுவிட்டனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சைல்டு லைன் அமைப்பினர், திருவாரூர் திட்ட ஒருங்கிணைப்பாளர் வனிதா, தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் வி.கே.நடராஜன், பணியாளர்கள் முருகேஷ், காந்திமதி ஆகியோர் சிறுவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது இரண்டு சிறுவர்களும் வாத்து மேய்க்கும் தொழிலில் பயன்படுத்திய தரணியும் முன்னுக்குப் பின்னாக பதிலளித்தனர். எனவே, குழந்தைகளை மீட்டு மன்னார்குடி கோட்டாட்சியரிடம் விசாரணைக்கு அனுப்பிவைத்தனர். தரணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரணியின் கணவர் சிரஞ்சீவி தப்பி ஓடிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.