உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

டெல்டாவில் ஆடிப்பெருக்கை கொண்டாட தயாராகும் பெண்கள்: விற்பனையில் சிறுவர்கள் இழுத்து மகிழும் சப்பரங்கள்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்டாவில் ஆடிப்பெருக்கை கொண்டாட பெண்கள் தயாராகி வருகின்றனர். சிறுவர்கள் இழுத்துச் செல்லும் சப்பரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 6:00 am IST

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்டாவில் ஆடிப்பெருக்கை கொண்டாட பெண்கள் தயாராகி வருகின்றனர். சிறுவர்கள் இழுத்துச் செல்லும் சப்பரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருக்கு மதிப்பளிக்கும் வகையில், காவிரியில் பெருக்கெடுத்துவரும் தண்ணீரை வரவேற்றும், விவசாயிகளை வாழவைக்கும் தெய்வமாக விளங்கும் காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவில் ஆறுகள் செல்லும் வழியில் வசிக்கும் மக்கள் அன்றைய தினம் ஆற்றுக்கு சென்று பழம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்தும், மஞ்சள் கயிறு வைத்தும் பூஜைகள் செய்து வழிபடுவர்.  
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், சிறுவர்கள் சப்பரம் என்றழைக்கப்படும் சிறிய அளவிலான தேரை இழுத்து தங்களது குடும்பத்துடன் ஆற்றங்கறைக்குச் சென்று மகிழ்வார்கள். அந்த நிகழ்வு ஆடி 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சிறிய தேரான சப்பரம் முந்தைய காலங்களில், வீடுகளிலும், சிலர் விற்பனைக்காக சப்பரம் செய்து வைத்திருப்பார்கள்.  
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சப்பரம் விற்பனை செய்து வரும் குடவசல் பகுதியைச் சேர்ந்த மருதையன் என்பவர் கூறியது:  
முன்பெல்லாம் ஆடிப்பெருக்கையொட்டி, பெண்கள் ஆற்றங்கரைகளுக்கு பூஜைப் பொருள்கள் கொண்டு சென்று காவிரியை வழிபடுவர். அவர்களுடன் அந்த தெருக் குழந்தைகள், சிறுவர்கள் அனைவரும் சிறிய அளவிலான தேர் போன்ற சப்பரத்தை இழுத்துச் சென்று மகிழ்வர். இதற்கென, ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட சப்பரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தேன்.  கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் அவ்வளவு சிறப்பாக  கொண்டாடவில்லையென்பதால், சப்பரம் தயாரித்து விற்பனை செய்யவில்லை.  
நிகழாண்டு, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காவிரி நீர் ஆறு மற்றும் வாய்க்கால்களில் செல்வதால் ஆடிப்பெருக்கு வெகு விமரிசையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஓடும் ஆறுகளில் ஆடிப்பெருக்கை கொண்டாடவுள்ளனர். சிறுவர்களின் மகிழ்வை திரும்பப்பெரும் வகையில் குறைந்த அளவிலான சப்பரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். முன்புபோல விற்பனை இல்லை. இருப்பினும் சிறுவர்களுக்காக குறைந்த அளவிலான சப்பரங்களை செய்து விற்பனைக்கு வைத்துள்ளேன். ஒரு சப்பரத்தை தயாரிக்க ரூ.150-க்குமேல் செலவு ஆகிறது.  ஆனால், ரூ. 200-க்கு விற்பனை செய்து வருகிறேன் என்றார். சிறுவர்கள், வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த வகையான சப்பரங்களை ஆத்ம திருப்திக்காக செய்துவரும் மருதையன் போன்றோரை பாராட்டலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.