தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பேருந்து ஓட்டுநரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 5:58 am IST

திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு  தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ராயநல்லூரைச் சேர்ந்த கார்த்தி ஓட்டி வந்தார். திருத்துறைப்பூண்டி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தோபு, பேருந்து பின்னால் வந்த நான்கு இளைஞர்கள் முந்திச் செல்ல வழிவிடவில்லையென்று கூறி, பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் கார்த்தியை தாக்கிவிட்டு, கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்களாம். இதில், காயமடைந்த கார்த்தி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கமல்ராஜ், அந்தோணி, ஜெகதீசன்  உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.