தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஆறுகளில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், எண்கண் ஊராட்சிகுள்பட்ட வாளவாய்க்கால் தலைப்பு, மதகு மற்றும் நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட மூணாறு தலைப்பு கோரையாறு

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவாரூர் மாவட்டம், எண்கண் ஊராட்சிகுள்பட்ட வாளவாய்க்கால் தலைப்பு, மதகு மற்றும் நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட மூணாறு தலைப்பு கோரையாறு ஆகிய பகுதிகளில் நீர்வரத்தை, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலருமான மணிவாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வின்போது, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி அப்பகுதிகளில் நீர்வரத்தைப் பார்வையிட்டு, பாசனத்துக்காக ஆறுகளுக்கு நீர் பிரித்து திறந்துவிடும் அளவீடு, கரைகளின் பலம் குறித்தும் செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி அறிவுறுத்தினார்.    
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம், வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.