சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நெகிழி இல்லாத தமிழகம்: திருவாரூர் மாவட்டம் முன்மாதிரியாக விளங்க வேண்டும்

நெகிழி இல்லாத தமிழகம் உருவாவதில், திருவாரூர் மாவட்டம் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு

Updated On :30 ஜனவரி 2024, 10:00 pm IST

நெகிழி இல்லாத தமிழகம் உருவாவதில், திருவாரூர் மாவட்டம் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பங்கேற்று பேசியது:
தமிழகத்தில் வரும் 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நெகிழி பொருள்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, கிராம ஊராட்சிகளில் நெகிழி பைகள், தட்டுகள், நெகிழி பூச்சு கொண்ட தேநீர்க் கோப்பைகள், தம்ளர், குடிநீர் பாக்கெட்டுகள், உறிஞ்சுக் குழாய்கள், கொடிகள் போன்றவைகளை தவிர்த்து அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேலும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையிலிருந்து விடுபட அனைத்து குடியிருப்புகளிலும், கழிவறைகளைக் கட்டாயம் கட்ட வேண்டும். எதிர்வரும் மழை காலங்களில் ஊரகப் பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கழிவுநீர் தேங்காமல் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பாத்திரங்களில் பிடித்த தண்ணீரை காற்று புகாதவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், கிராம சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களை தூய்மையாக பராமரித்து, சுகாதாரமான தமிழகத்துக்கு வழிவகுக்க வேண்டும். இதற்கு திருவாரூர் மாவட்டம் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இதையடுத்து, ஆட்சியர் தலைமையில், "முழு சுகாதார தமிழகம்; முன்னோடி தமிழகம்' என்ற பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய்க் கோட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.