சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்களில்  72- ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:00 pm IST

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்களில்  72- ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 திருவாரூரில்...
திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும்,  "பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பசுமையைக் காப்போம்' என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவியர் சங்கத் தலைவி வி. ரசிகா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.ஸ்ரீதேவி, கல்லூரிச் செயலர் மிஸ்கின், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பெரோஸ்ஷா, பெஜிலா பெரோஸ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது. 
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் அண்ணாதுரை தேசியக்கொடியேற்றினார். விழாவில் பள்ளி தாளாளர் சந்திரா முருகப்பன், செயலாளர் எம். இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் ஜி. முருகப்பன், துணை முதல்வர் மலர்விழி இன்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் முருக பூபதி தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் சமியுன் மஜீத் பரிசுகள் வழங்கினார். 
எண்ணக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் இராதாகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் ஆளுநரின் ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற 6 மாணவர்கள் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளிள் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மன்னார்குடியில்...
காங்கிரஸ்: நகர காங்கிரஸ் கட்சி சார்பில், தேரடி, காளவாய்க்கரை, வெண்ணெய்த்தாழி மண்டபம் ஆகிய இடங்களில் உள்ள காந்தி,  காமராஜர், நேதாஜி, இந்திராகாந்தி ஆகியோரது சிலைக்கு கட்சியின் நகரத் தலைவர் ஆர். கனகவேல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்தனர். 
எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி: வடசேரி சாலையிலுள்ள எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளித் தாளாளர் ப. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கல்வியல் துறை முதல்வர் கே. மோகனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதில், மாணவர்கள் தேசத் தலைவர்கள் வேடமிட்டு அவர்களின் பொன்மொழிகளை வாசித்தனர். கலை நிகழ்ச்சி போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, பள்ளி நிர்வாகி ஆர். அனிதா, பள்ளி முதல்வர் உ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.    
ஸ்ரீசண்முக மெட்ரிக் பள்ளி: புதிய புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தாளாளர் ஆர்.எஸ். செந்தில்குமார், மற்றும் எஸ். சண்முகராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.டி. ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
தரணி மெட்ரிக்பள்ளி: கோபாலசமுத்திரம் வடக்குவீதியில் உள்ள தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தரணி வித்தியா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா, பள்ளி விளையாட்டு விழா பள்ளித் தாளாளர் கே. விஜயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், தேசியக் கொடியை இந்தியன் கையுந்து பந்து அணித் தலைவர் ஏ. முத்துசாமி ஏற்றி வைத்தார். 
ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் பள்ளி: புதிய புறவழிச் சாலையில் உள்ள ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் கே. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக காந்தியவாதி ராஜகோபால் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவினையொட்டி நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் ஜெ. அசோகன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கல்லூரி: மேலவாசல் சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரியில் க. மோகனா தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி தாளாளர் க. சதாசிவம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செருமங்கலத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. 
வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு: மேலவாசல் வீட்டுவசதிவாரியக் குடியிருப்பில் நாங்கள் மகளிர் வட்டம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு அதன் தலைவர் தெ. சங்கரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செல்வி, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர்  கோ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினர்.
இது தவிர லெட்சுமாங்குடி லிட்டில் பிளவர் பள்ளி, வாழாச்சேரி மெட்ரிக். பள்ளி, அரசு  பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளி, மரக்கடை நடுநிலைப்பள்ளி, செவன்த் ஸ்டார் பள்ளி மற்றும் பனங்காட்டங்குடியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிபதி பி. கவிதா தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளங்கோவில் ஜான் டி. பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதேபோல், மேலக்கொறுக்கை சாய் ஸ்ரீனிவாஸ் மெட்ரிக். பள்ளியில் தாளாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், தலைமை ஆசிரியர் தனசேகரன் முன்னிலையில்,  பள்ளி நிறுவனர் ஆர். புஷ்பா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை அலுவலகம், பிறவிமருந்தீசர் ஆலய வளாகம், வர்த்தகர் சங்கக் கட்டடம், ஆதிரெங்கம் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், நுகர்வோர் பாதுகாப்பு மையம், பாரதமாதா தொண்டு நிறுவனம், காந்தி அமைதி மையம் மற்றும் கிளைச்சிறை ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. 
பாரதிய ஜனதா கட்சி சார்பில், ரயில்வே கேட் அருகே நகரத் தலைவர் வினோத் தலைமையில், மாவட்ட செயலாளர் இளசுமணி பாரத மாதா  உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முத்துப்பேட்டையில்...
முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் நகரத் தலைவர் ஜெகபர் அலி தலைமையிலும், மூத்த குடிமக்கள் இயக்கம் சார்பில்  அதன் தலைவர் சக்திவேல் தலைமையிலும், முத்துப்பேட்டை வர்த்தகக் கழக அலுவலகத்தில் அதன் தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையிலும், சுங்கத்துறை அலுவலகத்தில் ஆய்வாளர் எம்.தென்னொலி தலைமையிலும், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 
இதேபோல், கோவிலூர் பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமையிலும், முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் டாக்டர் மீரா உசேன்,  ரகமத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முன்னாள் முதல்வர் சகுந்தலா தலைமையிலும், பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளர் முரளிதரன் தலைமையிலும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. முத்துப்பேட்டை தேசிய ஒருமைப்பாடு இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மலைமகள், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர். நீடாமங்கலம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் ஜூலியெட் ஜெயசிந்தாள் தேசியக் கொடியை ஏற்றினார். இதில், கூடுதல் ஆணையர் கலைச்செல்வம்,  துணை ஆணையர்கள் பால சுப்பிரமணியன், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவகத்தில் செயல் அலுவலர் ஆர். சங்கர் தேசியக் கொடி ஏற்றினார்.
நீடாமங்கலம் உதவும் மனங்கள் அமைப்பின் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா கே.எஸ். பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. மனவளக் கலை மன்ற பேராசிரியர் காத்தமுத்து தேசியக்கொடி ஏற்றினார். வர்த்தகர் சங்க அலுவலகத்தில் தலைவர் ராஜாராம் தலைமையில் ஆசிரியர் அமீது தேசியக் கொடி ஏற்றினார். நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் நீலன். அசோகன் தலைமையில், ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அலுவலர் ப. சிவஞானம் தேசியக்கொடி ஏற்றினார். செயின்ட்ஜூட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் எஸ். நடராஜன் முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என். கோவிந்தராஜன் தேசியக்கொடி ஏற்றினார். 
நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி வி. பாலசுப்பிரமணியன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் அரசு வழக்குரைஞர்  கோபிகண்ணன், வழக்குரைஞர் சங்கத் தலைவர் லோகநாதன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலத்தில் நகர பாஜக சார்பில், கட்சியின் நகரத் தலைவர் எல். ஜெயக்குமார் தலைமையில் பழைய தாலுக்கா அலுவலகம், மன்னார்குடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் பாஸ்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல், கப்பலுடையான் கிராமத்தில்  சுதந்திர தின விழா நடைபெற்றது.
குடவாசலில்...
குடவாசலில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொ) அ. ஜான்பீட்டர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற பேராசிரியர் அருணாச்சலம் சிறப்பு விருந்திரனராகக் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியர் ரமேஷ்குமார், கல்லூரி நிதியாளர் ம. முருகானந்தம், உடற்கல்வி இயக்குநர் புவனேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.