எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

திருக்கண்ணமங்கை-அம்மையப்பன் சாலை சீரமைப்பு

"தினமணி' செய்தி எதிரொலியாக, திருக்கண்ணமங்கை- அம்மையப்பன் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

"தினமணி' செய்தி எதிரொலியாக, திருக்கண்ணமங்கை- அம்மையப்பன் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை- அம்மையப்பன் சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும், குழியுமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சியளித்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்குள்ளாயினர். இந்த சாலையைச் சீரமைக்குமாறு இப்பகுதி மக்கள் பல்வேறு நிலைகளில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், இங்கு புதிதாக சாலை அமைக்கக் கோரி, "தினமணி'யில் அண்மையில், "உயிர் பலிக்கு காத்திருக்கும் சாலை' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதைத் தீவிரமாக கருதிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், இப்பகுதி மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவியர் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.
திருவாரூர்- தஞ்சை சாலையையும், திருவாரூர்- கும்பகோணம் சாலையையும் இணைக்கும் பிரதான குறுக்குச் சாலையாக இந்த சாலை விளங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.