9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

"ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும்'

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அனைவருக்கும் தாய் மொழியில் இலவசக் கல்வி வழங்க வேண்டும் என, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:42 am IST

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அனைவருக்கும் தாய் மொழியில் இலவசக் கல்வி வழங்க வேண்டும் என, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மன்னார்குடியில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ.பி.வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்: மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன் அனைத்தையும் அரசே ஏற்று, நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைவருக்கும் தாய் மொழியில் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளை சுகாதார வசதிகளோடு பராமரிக்க வேண்டும். 
மன்னார்குடியை மையமாகக் கொண்டு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், திருவாரூரில் அரசு பொறியியல் கல்லூரியும் தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருவாரூரில் மாவட்ட அளவிலான மாநாடு  வருகிற செப்.1-ஆம் தேதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  
இக்கூட்டத்தில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை அருள்ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு.பாலசுப்ரமணியன், எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.