அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா

மறைந்த தமாகா தலைவரானஜி.கே.மூப்பனாரின் 87-ஆவது பிறந்த நாள் விழா, மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

மறைந்த தமாகா தலைவரானஜி.கே.மூப்பனாரின் 87-ஆவது பிறந்த நாள் விழா, மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள காமராஜர் சிலையருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமாகா மாவட்ட இளைஞரணித் தலைவர் ஜி.ஆர்.சங்கர் தலைமை வகித்தார். தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ்.தினகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், கட்சி கொடியேற்றிவைத்து, 87 பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி,சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கட்சியின்  மாநில பொதுக் குழு உறுப்பினர் சிங்கு.பாண்டியன், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் வடுவூர் கரிகாலன், வட்டாரத் தலைவர்கள் மன்னார்குடி  இல.முனியப்பன், நீடாமங்கலம் (மே)  சந்திரசேகர், நீடாமங்கலம் (கி) ராஜேந்திரன், நகர்மன்ற முன்னாள் தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன், கட்சியின் நகரத் தலைவர்  கே.எஸ்.நடனபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.