பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மன்னார்குடியில் துணை முதல்வர் பங்கேற்கும் பொதுக் கூட்டம்:  மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் மன்னார்குடியில் செப். 1-ஆம் தேதி நடைபெறவுள்ள

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் மன்னார்குடியில் செப். 1-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் பங்கேற்கவுள்ளார். இதையொட்டி, நடைபெறும் பொதுக் கூட்ட மேடை அமைக்கும் பணியை தமிழக உணவுத்துறை அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான ஆர்.காமராஜ் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மன்னார்குடி தேரடி திடலில் பொதுக் கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமர பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, அமைச்சர் ஆர். காமராஜ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது:
காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்க, அதிமுக அரசு சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்றிருப்பதைக் கொண்டாடும் வகையிலும், குறுவை தொகுப்புத் திட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும், சாதனைகளையும் பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையிலும், மன்னார்குடி தேரடி திடலில் அதிமுக பொதுக் கூட்டம் செப்.1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 
 இக்கூட்டத்தில் தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட கட்சி மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொள்கின்றனர் என்றார்.
பேட்டியின்போது, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கா.தமிழ்ச்செல்வம் (மன்னார்குடி), வீ.ஜீவானந்தம் (கோட்டூர்), ஜி.அரிகிருஷ்ணன் (நீடாமங்கமல்) ,ஜெயலலிதா சட்டப் பேரவை மாவட்டச் செயலாளர் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், ஊராட்சித் தலைவர் டி.மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.