அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 தொடங்கக் கோரிக்கை

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் வகையில் வகுப்புகள் தொடங்க வேண்டும், ஆனால் இப்பள்ளியை நிர்வகிக்கும் மத்தியப் பல்கலைக்கழகம் இதுவரை அதற்கான பணிகளை தொடங்கவில்லை. இதுகுறித்து, பெற்றோர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.பி. தாஷை சந்தித்து முறையிட்டனர். ஆனால், பல்கலைக்கழக தரப்பில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க போதுமான நிதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து, பெற்றோர்கள் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். கூட்டத்தில், பிளஸ் 1 வகுப்பு தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் முறையிடுவது, பெரும்பாலும் தற்காலிக ஆசிரியர்களே உள்ள இப்பள்ளியில் மத்திய அரசால் பள்ளிக்கு தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.