முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலில் சேதமடைந்த தென்னைமரங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம்
முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலில் சேதமடைந்த தென்னைமரங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கக் கோரி, தமிழக தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தென்னை விவசாயிகள் ஒரு மினிலாரியில் பாதிக்கப்பட்ட தென்னைக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தியபடியும், நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது கைகளில் தென்னைக் குருத்துகளுடன் முத்துப்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். இந்த பேரணியை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கோ. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்: இதைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வி. துரைமாணிக்கம், மாவட்டத் தலைவர் நா. ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் கருணாநிதி, பொருளாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கே. முருகையன், விவசாயச் சங்க ஒன்றியச் செயலாளர் யோகநாதன், ஓய்வுபெற்ற வேளாண்துறை அலுவலர் கோவி. ரெங்கசாமி ஆகியோர் பேசினர்.
இதில், தமாகா மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தில்லை ஆர்.வி. காமராஜ், காங்கிரஸ் பிரமுகர் ஐ.எஸ்.ஆர். பாலா, திமுக மூத்த உறுப்பினர் ப. சுப்பிரமணியன், சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் குணசேகரன், திமுக விவசாய அணி நிர்வாகி ஜீவானந்தம் மற்றும் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






