இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நினைவு தினம்: பெரியார் சிலைக்கு மரியாதை

தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:07 am IST

தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூரில்...
திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்
மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில், நகரச் செயலர் மு. ராமதாசு, ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வம், ஒன்றியச் செயலர் கா. செல்வராசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை. கௌதமன், நகரத் தலைவர் கோவி. அழகிரி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். 
அண்ணா திராவிடர் கழகம்: இதேபோல், அண்ணா  திராவிடர் கழக பொதுச் செயலர் வி. திவாகரன், அமமுக மாநில தேர்தல் பிரிவுச் செயலர் கா. மலர்வேந்தன், அதிமுக ஜெ.பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம் தலைமையிலும் தனித் தனியே கட்சியினர் வந்து மாலை அணிவித்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் தலைமையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அதன் கிளைத் தலைவர் ஆர். யேசுதாஸ் தலைமையில் மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து, மன்னார்குடி, கோட்டூர், வடுவூர் பகுதிகளில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மாலை அணிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.