திருத்துறைப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டன.
திருவாரூர் சாலையில் வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அமிர்தலிங்கம், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயந்தி, இளைநிலை பொறியாளர் ரவி, நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் இப்பணி நடைபெற்றது. பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.