பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

"தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்'

அனைத்துத் தரப்பு மக்களும் தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து, கழிப்பறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:43 pm

DIN

அனைத்துத் தரப்பு மக்களும் தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து, கழிப்பறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்கான தொலைக்காட்சி பெட்டி இயக்கத்தை, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தை முழுமையான அளவில் சுகாதாரமான மாவட்டமாக மாற்றிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் பகுதிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் பெருமளவில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லை எனும் நிலையைத் தக்க வைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் தினசரி வருகை தரும் பொதுமக்களுக்குத் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு ஒரு தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு, அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறுந்தகடுகள் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படும். 
இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து, கழிப்பறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர், கண்காணிப்பாளர் பாலகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.