திருவாரூர் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ. 33 லட்சம்

திருவாரூர் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்ட  சிறப்பு திட்டத்தின் விற்பனை இலக்கு ரூ. 33 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

திருவாரூர் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்ட  சிறப்பு திட்டத்தின் விற்பனை இலக்கு ரூ. 33 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு திட்டத்தின் சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருவாரூர் டிஎஸ்பி வி. சுகுமாரன் பங்கேற்று, விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கோ - ஆப்டெக்ஸ் நிர்வாகிகள் கூறியது: இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை வாங்கலாம். தேவைக்கேற்ப ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் விலையில் மென்பட்டுப் புடவைகள், கோரா பட்டுப் புடவைகள் ஆகியவை புதிய வடிவமைப்பிலும், நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பாரம்பரிய பருத்தி புடவைகளான கோவை காட்டன் சேலைகள், சேலம் காட்டன், திண்டுக்கல் காட்டன், நெகமம் காட்டன், ஆர்கானிக் காட்டன், உறையூர் காட்டன், கூரைநாடு காட்டன், டர்க்கி டவல், குர்த்தீஸ் மற்றும் ஏற்றுமதி ரகங்கள், நெல்குரோ வேட்டிகள் ஆகியவை உள்ளன. இதுமட்டுமல்லாமல் அழகிய வடிவமைப்பில் படுக்கை விரிப்புகள், போர்வைகள், ஜமுக்காளங்கள், திரைச்சீலைகள், சுடிதார், நைட்டிகள், ரெடிமேட் சட்டைகள், தலையணையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு உள்ளன. இவை அனைத்தும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தனியாக ஒன்று மட்டும் வாங்குவோருக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தஞ்சாவூர் மண்டலத்துக்கான விற்பனை இலக்காக ரூ. 4 கோடியும், இதில் திருவாரூர் விற்பனை நிலையத்துக்கு ரூ. 33 லட்சமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மண்டல நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என். மாதேஸ்வரன், சு. ராஜலட்சுமி, தஞ்சாவூர் மண்டல மேலாளர் இரா. சுரேஷ்குமார், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் இரா. சீனிவாசன், தணிக்கை நிர்வாகி மா. நிர்மலா, திருவாரூர் விற்பனை நிலைய மேலாளர் கே. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com