சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

காரில் டயர் வெடித்து விபத்து: ஓட்டுநர் சாவு, 5 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்து, சாலை தடுப்பில்

Updated On :26 ஜூன் 2018, 8:47 am IST

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்து, சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
காரைக்கால் புதுவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பெரியார் மணி (36). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், பிரகாஷ், மணிமாறன்,  பரமேஷ், ராம்குமார் ஆகிய ஆறு பேரும் ஒரு காரில் புதுக்கோட்டை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றனர்.
பின்னர், அவர்கள் அங்கிருந்து முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்துகொண்டிருந்தனர். பெரியார் மணி காரை ஓட்டி வந்தார். இந்த கார் பின்னத்தூர் வளைவு அருகே வரும்போது, முன்பக்க டயர் வெடித்து, சாலையோரத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேரையும் அப்பகுதியினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு, சிகிச்சைப் பலனின்றி பெரியார் மணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை: பின்னத்தூர் வளைவுப் பகுதியில் விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.