மன்னார்குடியில் கடன் பிரச்னை காரணமாக விஷம் குடித்து சிகிச்சையிலிருந்த தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுக்கூர் சாலையைச் சேர்ந்தவர் ஆலமுத்து. இவரது மனைவி தமிழரசி (31), மகன் ஷியாம் (11), மகள் மனிஷா (9). ஆலமுத்து துபையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கணவரின் சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்ததால் தமிழரசி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் அண்மையில் மகன், மகளுடன் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையறிந்த, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் மூவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில், ஷியாம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தமிழரசியும், மனிஷாவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இருவரும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக தேர்தல்: என்னென்ன விதிகள் அமலில் இருக்கும்?
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!

ஸ்கூட்டருக்கு இணையாக... அமேசானில் கிடைக்கும் புதிய மின்சார சைக்கிள்!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

