மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வைப்பூரில் மக்கள் நேர்காணல் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவாரூர் அருகேயுள்ள வைப்பூர் ஊராட்சியில், நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், 68 பயனாளிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட

Updated On :29 மார்ச் 2018, 4:10 am

திருவாரூர் அருகேயுள்ள வைப்பூர் ஊராட்சியில், நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், 68 பயனாளிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் புதன்கிழமை வழங்கினார்.
வைப்பூரில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது: பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில், திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்த்து, சுகாதாரத்துடன் வாழ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்காத ஊராட்சிகளின் பட்டியலில் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குநர் சங்கரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, இணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில் குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.