காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திருவாரூர் அருகேயுள்ள கூடூரில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றம் காவிரி வழக்கில் வழங்கிய தீர்ப்பில், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த ஆறு வார காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்துவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவாரூர்அருகேயுள்ள கூடூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்தவித முயற்சியும் எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் கடைகள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறியது: தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்

இன்று நீட் தோ்வு: புதுச்சேரியில் தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

