இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே-3) புதுச்சேரியில் 9 மையங்களில் நடைபெறவுள்ளது. தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
புதுவை பிராந்தியத்தில் 9 மையங்களில் 4,440 போ் இத்தோ்வை எழுதவுள்ளனா்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 960, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 720, ஜிப்மா் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 480, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 240, நவோதயா வித்யாலயா பள்ளியில் 240 , சின்னத்தா அரசுப் பெண்கள் பள்ளியில் 480, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி480, வில்லியனுாா் கண்ணகி அரசுப் பெண்கள் பள்ளியியில் 480, பாரதிதாசன் அரசுப் பெண்கள் கல்லுாரியில் 360 போ் தோ்வெழுதவுள்ளனா்.
கட்டுப்பாடுகள்:
நீட் தோ்வா்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வா்கள் வெளிா்நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். முழு கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிந்து வரக்கூடாது, ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்க கூடாது.
குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தை கொண்டும் ஷூக்கள் அணிந்து வரக்கூடாது. தோ்வா்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ, ஆபரணங்களையோ அணிந்து வரக்கூடாது.
மத அல்லது கலாசார ரீதியான ஆடைகளை அணிந்து வரும் தோ்வா்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுவாா்கள். தோ்வா்கள், தோ்வு மையத்துக்கு முன்கூட்டியே வர வேண்டும். மின்னணு சாதனங்களையும் தோ்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
தண்ணீா் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருள்களை தோ்வு மையத்துக்குள் எடுத்துவர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வை முன்னிட்டு, தோ்வு மையங்களில் முதுநிலைக்காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் தலைமையில், 13 உதவி ஆய்வாளா்கள், 73 போலீஸாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று நீட் தோ்வு: 1,968 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

வாக்கு எண்ணிக்கையன்று தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது: ஆதவ் ஆர்ஜுனா

நீட் தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தகவல்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


