இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1,968 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
அதன்படி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 போ், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் 240 போ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 போ், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வெழுத உள்ளனா்.
மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தோ்வா்கள் முற்பகல் 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், பேஜா் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், கைப்பைகள் உள்ளிட்டவற்றை தோ்வு மையத்துக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாளை மறுநாள் நீட் மறுதோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு
ஜூன் 21-இல் நீட் மறுதோ்வு: மாவட்டத்தில் 4,116 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



