பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பொதுக் காப்பீட்டு பங்கு விற்பனை: எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொதுக்காப்பீட்டு பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி திருவாரூரில் எல்ஐசி ஊழியர்கள் சார்பில் வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 4:08 am

பொதுக்காப்பீட்டு பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி திருவாரூரில் எல்ஐசி ஊழியர்கள் சார்பில் வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது.
2017-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தில் விடுபட்ட ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எல்ஐசி நிர்வாகம் மற்றும்  மத்திய அரசு ஒப்புக்கொண்ட 5 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், காலிப்பணியிடங்களில் எல்ஐசி-யின் வளர்ச்சிக்கு ஏற்ப மூன்று மற்றும் நான்காம் நிலை ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். பொதுக் காப்பீட்டு பங்கு விற்பனையைக் கைவிட வேண்டும்.
முதல்நிலை அதிகாரிகள் பதவி உயர்வில் புதிதாகத் திணிக்கப்பட்ட தேர்வு முறையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுத்தி எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஆகியவை வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த  வேலை நிறுத்தத்துக்கு தேசிய கள ஊழியர் கூட்டமைப்பும், லிகாய் அமைப்பும் ஆதரவு கொடுத்தன.
இதையொட்டி மார்ச் 28-ஆம் தேதி  புதன்கிழமை பகல் 12 மணி முதல் 1 மணி வரை  அலுவலக பணிகளைப் புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  திருவாரூர் எல்ஐசி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் செந்தில்குமார், லிகாய் முகவர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் அழகிரிசாமி, பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கருணாநிதி, முதல்நிலை அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகி மனோஜ், ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் பூங்குன்றன், நிதீஷ், சண்முகசுந்தர், கமலவடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.