தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மின் ஊழியர்களின் சிறப்புப் பேரவைக் கூட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 4:06 am

திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மின் திட்டத் தலைவர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார். மண்டலச் செயலர் கே. அம்பிகாபதி, சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 26 மாத காலத்துக்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகமும், தமிழக அரசும், மின் ஊழிய மத்திய அமைப்பின் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு, 2.57 சதவீத ஊதிய உயர்வை ஒப்பந்தம் மூலம் வழங்கியதுடன், நிலுவைத் தொகையையும், அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காண்பது குறித்தும், இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கும் வகையில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.