திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குடிநீர் கோரி, 2 இடங்களில் பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கஜா புயல் காரணமாக நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மின்விநியோகம் தடைப்பட்டதால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயலாமல், கடந்த 4 நாள்களாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, வெளிமாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 7 நடமாடும் ஜெனரேட்டர்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
சாலை மறியல்: இதனிடையே, குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, நீடாமங்கலம் அருகேயுள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை நீடாமங்கலம்- தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெரும்பாலான பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டனர்.
தகவலறிந்து வந்த நீடாமங்கலம் போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், நீடாமங்கலம்- தஞ்சாவூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், கானூர் பருத்திக்கோட்டை கிராம மக்கள் குடிநீர் கோரி, நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் உள்ள புதுரோடு பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அறிமுகம்!

ஜார்க்கண்ட் போராட்டம் பற்றிப் பேசாமல் இரட்டை வேடம் போடும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK


