மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

திருத்துறைப்பூண்டியில் தொடர் சாலை மறியல்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை எனக் கூறி, பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால், திங்கள்கிழமை போக்குவரத்து ஸ்தம்பித்தது. 
திருவாரூர்- மன்னார்குடி சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. மேலும்,  சாலையிலேயே அடுப்பு அமைத்து, பொதுமக்கள் சமையல் செய்தனர். திருப்பத்தூர் கிராமத்தில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்டனர். பின்னர், போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய் கோட்டாட்சியரை மீட்டனர்.
இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் பகுதி மக்கள் நெடுஞ்சாலையிலேயே அடுப்பு வைத்து சமையல் செய்து, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பகுதியில், அமைச்சர்கள் ஆர். காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை பொதுமக்கள் வழிமறித்தனர். அப்போது, கஜா புயலின் பாதிப்பை அரசு உணர்ந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படுமென அமைச்சர் ஆர். காமராஜ் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.