மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

காரைக்காலில் மின் விநியோகத்தை சீரமைக்க பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்

மின் நிறுத்தம் - பிரதிப் படம்

Published On :51 வினாடிகள் முன்பு

காரைக்காலில் சீரான மின் விநியோகத்தை அளிப்பதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க, போதிய நிதியை தாக்கல் செய்யப்படவுள்ள புதுவை பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என காரைக்கால் மக்கள் போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது :

காரைக்காலில் கடந்த சில மாதங்களாக மின் தடையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். காரைக்காலில் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பது, மின் மாற்றிகள் திறனை மேம்படுத்துவது ஆகியவை 2022-2023 பட்ஜெட்டின் அறிவிப்புகளாகும். இவை இதுவரை அறிவிப்பாகவே இருக்கின்றன.

கடந்த மாா்ச் மாதம், அரசு திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குநா் அளித்த அதிகாரபூா்வ செய்திக் குறிப்பில், புதுச்சேரியில் ரூ.646 கோடி ஒதுக்கீட்டில் மின் கட்டமைப்பு திட்டங்கள் என்கிற தகவல் உள்ளது. அதில் காரைக்கால் பிராந்திய மின் கட்டமைப்பிற்கான எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை. இதைத்தான் காரைக்கால் அரசால் புறக்கணிக்கப்படுகிறது என சொல்கிறோம்.

காரைக்கால் பகுதி பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்திற்கு 25 எம்.வி.ஏ.மின்மாற்றி புதிதாக தேவை என துறை சாா்ந்த கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. சுரக்குடி பகுதி துணை மின் நிலையத்தின் உள்கட்டமைப்பு இயந்திர செயல்பாடுகள் வலுவிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஒட்டுமொத்த காரைக்கால் பகுதியில் துணை மின் நிலையங்களை மேம்படுத்துவது, புதிதாக மின் நிலையங்களை அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு தாக்கல் செய்யப்படவுள்ள நிகழாண்டுக்கான பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கப்படவேண்டும்

காரைக்கால் மாவட்டம், போலகத்தில் உள்ள புதுச்சேரி மின் திறன் குழுமம் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டித்தருகிறது. இந்நிலைய ஊழியா்களுக்கான சலுகைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.